தமிழ்நாடு     மதுரை     தஞ்சாவூர்


ஒரு குழுமம் என்பது ஒரே மாதிரியான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் மற்றும் பொதுவான வாய்ப்புகள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்கும் பிரிவுகளின் ஒரு புவியியல் செறிவு (நகரம்/சிறுநகரம்/சில அருகாமையிலுள்ள கிராமங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள பகுதிகள்) என வரையறுக்கப்படுகிறது. ஒரு கைவினைஞர் குழுமம் என்பது கைவினை/கைத்தறி பொருட்களை தயாரிக்கும் புவியியல் செறிவான (பெரும்பாலும் கிராமங்கள்/சிறுநகரப் பகுதிகளில்) குடும்பப் பகுதிகள் ஆகும். ஒரு பொதுவான குழுமத்தில், அப்படிப்பட்ட உற்பத்தியாளர்கள் அடிக்கடி ஒரு பாரம்பரிய சமுதாயத்தை சார்ந்திருப்பார்கள், அவர்கள் தலைமுறை தலைமுறையாக நீண்ட காலம் நிறுவப்பட்ட பொருட்களை தயாரிப்பார்கள். உண்மையில், பல கைவினைஞர் குழுமங்கள் நூற்றாண்டு காலமாக கைவினைஞர்களை கொண்டுள்ளது.

 

தஞ்சாவூர் குழுமம் பற்றி:-

 

தஞ்சாவூர் குழுமம் தமிழ்நாடு மாநிலத்தில் ன்னிமதுரை மாவட்டத்தின் கீழ் அமைகிறது.

தஞ்சாவூர் குழுமத்தால் 315க்கும் மேற்பட்ட கைவினைப்பொருட்களை உருவாக்க முடியும் & 9 SHG-கள் பலமான வேலைக் குழுவை ஆதரிக்கின்றது. ஆள் திரட்டுதல் நாளுக்கு நாள் வேகத்தை பெறுகிறது.

 

கிராமிய ஓவியம் தீட்டுதல்:-

 

தஞ்சாவூர் ஓவியம் தீட்டுதல் கடவுள் மீதான பக்தி மற்றும் கடவுளின் அழகை பற்றி நம்மிடம் சொல்கிறது. பண்டைய கால பக்திக் கதைகள் கிராமியக் கலையால் முன்னால் சொல்லப்பட்டவைகளாகும். இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளும் சிற்றூர்களும் சொல்வதற்கு ஒரு புராணக்கதைகளை வைத்திருப்பார்கள். தஞ்சாவூரின் ஓவியங்கள் தஞ்சை ஓவியங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை கடவுள்கள் மற்றும் கதாநாயகர்களின் புராணக்கதைகளை சொல்லும் சிறந்த எடுத்துரைப்பாளர்களாகும். இவைகள் நம் பண்டையகாலத்தை காட்டும் கண்ணாடி நீர் தோற்றமாகும் மற்றும் அருமையான கடந்தகால மற்றும் கலாச்சார சொத்தாகும்.

தஞ்சாவூர் ஓவியத்தின் முகப்புரை அடிப்படையில் சமயம் மற்றும் தெய்வீகம் ஆகும் மேலும் கலைப்படைப்பு தன் புராண பாத்திரங்கள் மற்றும் சம்பவங்களின் கலைநயமிக்க வருணிப்பிற்காக புகழ்பெற்றுள்ளது.

ஆற்றல்வாய்ந்த சோழ பேரரசின் ஆட்சிக்காலத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் தோற்றம் பெற்றன. 16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை, மராத்திய இளவரசர்கள், தஞ்சாவூரின் ரஜூக்கள் சமுதாயத்தினர், விஜயநகர பேரரசின் நாயக்கர்கள், மற்றும் திருச்சி, மற்றும் மதுரை நாயுடுக்கள் ஆகியோர் தஞ்சை ஓவியங்களை ஆதரித்தனர். ஆட்சியாளர்கள் தஞ்சை ஓவியங்களுக்கு ஆதரவு தந்தனர், எனவே அவை இக்காலங்களில் வளர்ந்து செழித்தோங்கியது. தஞ்சை ஓவியங்கள் அரண்மனைகளின் உட்பகுதிகளை அலங்கரித்தன மேலும் விரைவிலே அவைகள் அனைத்து வீடுகளிலும் காணப்பட்டன. அரசர் இரண்டாம் சரபோஜியால் கட்டப்பட்ட தஞ்சாவூரில் உள்ள “சரஸ்வதி மஹால் நூலகம்புகழ்பெற்ற தஞ்சை ஓவியங்களை காண்பிக்கின்றது.

தஞ்சாவூர் ஓவியங்கள் கடவுள் கிருஷ்ணரின் கடந்த காலம் மற்றும் வாழ்க்கை காணப்படுகின்றன. தஞ்சாவூர் ஓவியங்களின் தனித்தன்மை, அவைகளின் மிகச்சிறந்த தங்க இலை வேலைப்பாடு, கற்களுடனான கவரும் நகைகள், மின்னும் நிற வடிவமைப்புகள் மற்றும் கண்ணைக் கவரும் செதுக்கப்பட்ட கண்ணாடிகள் ஆகியவை ஆகும். தலையிடா தங்க இலை பயன்பாடு மற்றும் அரிய மற்றும் மதிப்பு மிக்க கற்கள் ஆகியவை அக்காலங்களில் வாழ்ந்த கைதேர்ந்த கலைஞர்களின் சிறப்பைக் கூறுகின்றன.

தஞ்சாவூர் ஓவியத்தின் பண்பு, படத்தில் உள்ள உருவங்கள் ஒரு உருண்டையான உடலையும், முட்டைவடிவ ஒளிவீசும் கண்கலை பெற்றிருத்தல் மற்றும் அவற்றைச் சுற்றி திறைவிரிப்புகள் மற்றும் வில்வளைவுகள் இருத்தல் ஆகியவை ஆகும். இந்த ஓவியங்கள் இருண்ட அறையில் ஒளியை வீசும்.

எளிமையான கித்தான் மற்றும் தூரிகையிலிருந்து மிக உயர்ந்த அழகின் வடிவமான தஞ்சாவூர் ஓவியங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஓவியங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கித்தான்(கேன்வாஸ்) முன்னதாக பலாமரத்தில் செய்யப்பட்ட்து ஆனால் நவீன கலைஞர்கள் ஒட்டுப்பலகையை(பிளைவுட்) பயன்படுத்துகின்றனர். ஒரு துணி படலம் இந்த பிளைவுட்டின் மீது அராபிய பசையை பயன்படுத்தி ஒட்டப்படுகின்றது. சுண்ணாம்பு பசையின் சீரான ஒரு படலம் மற்றும் ஒரு ஒட்டும் பொருள் துணி மீது தடவப்பட்டு காயவைக்கப்படுகின்றது. பின்னர் கலைஞர் கித்தானின் மீது நுண்ணிய படங்களை வரைகிறார். அணிகலன்களை ஓவியத்திற்குள் ஒட்டும்போது மற்றும் செதுக்கும்போது சுண்ணாம்பு பசை மற்றும் இறுக்கும் பொருள் பயன்படுத்தப்படுகின்றது.

தஞ்சாவூர் ஓவியங்களின் தூண்கள், உடைகள், வில்வளைவு கை சிம்மாசனங்கள் ஆகியவை வெவ்வேறு நிறங்களிலுள்ள தங்க இலைகள் மற்றும் இரத்தினங்களை கொண்டு அழகுபடுத்தப்பட்டு செய்யப்படுகின்றன. இந்த நிறங்கள் ஓவியத்தில் தீட்டப்பட்ட பிறகு, வெளிப்புறக் கோடுகளுக்காக பொதுவாக கரும்பழுப்பு பயன்படுத்தப்படுகின்றது. சிவப்பு பிண்ணனி நிறத்திற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டாலும், கரும்பச்சையும் பயன்படுத்தப்படுகின்றது. பெண்கடவுள்களுக்கு மஞ்சள் நிறம் பயன்படுத்தப்பட்டாலும் கடவுள்களுக்கு நிறம் மாறுபடும்: கிருஷ்ணருக்கு நீலமும், நடராஜருக்கு வெள்ளையும் பயன்படுத்தப்படுகின்றது. முற்காலத்தில் கலைஞர்கள் காய்கறி சாயங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட இயறகை நிறங்களையே பயன்படுத்தினர். பழைய தஞ்சை ஓவியத் தொகுப்புகள் கடவுள் உருவங்களை வரைவதோடு நின்றுவிட்டன. ஆனால் இன்றைய காலத்தில் நவீன கலைஞர்கள் புதிய பரிமாணங்களை வெளிக்காட்டுகிறார்கள். அவர்களும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஆட்சி செய்யும் கடவுள்களை வரைந்து காட்டத் தொடங்கியுள்ளனர்.

 

 பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் :-

 

1. ஒட்டுப்பலகை (பிளைவுட்) (நீர்புகாதன்மையுள்ளது)

2. நீண்ட துணி/பாப்லைன்

3. பெவிகால் (பசை)

4. மஞ்சள் ஆக்சைடு

5. சுண்ணக்கட்டிகள்

6. அராபிய பசை

7. மெல்லிய தங்கத் தகடு

8. கற்கள்

9. சுவரொட்டி நிற வண்ணம்

10. வட்டவடிவ தூரிகை-0, 00,000,1,3,6

11. தட்டையான தூரிகை-2

12. மஞ்சள் கார்பன்

 

செயல்முறை:-

 

 தஞ்சாவூர் ஓவியத்தின் பண்பு, படத்தில் உள்ள உருவங்கள் ஒரு உருண்டையான உடலையும், முட்டைவடிவ ஒளிவீசும் கண்களை பெற்றிருத்தல் மற்றும் அவற்றைச் சுற்றி திரைவிரிப்புகள் மற்றும் வில்வளைவுகள் இருத்தல் ஆகியவை ஆகும். இந்த ஓவியங்கள் இருண்ட அறையில் ஒளியை வீசும்.

எளிமையான கித்தான் மற்றும் தூரிகையிலிருந்து மிக உயர்ந்த அழகின் வடிவமான தஞ்சாவூர் ஓவியங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஓவியங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கித்தான்(கேன்வாஸ்) முன்னதாக பலாமரத்தில் செய்யப்பட்ட்து ஆனால் நவீன கலைஞர்கள் ஒட்டுப்பலகையை(பிளைவுட்) பயன்படுத்துகின்றனர். ஒரு துணி படலம் இந்த பிளைவுட்டின் மீது அராபிய பசையை பயன்படுத்தி ஒட்டப்படுகின்றது. சுண்ணாம்பு பசையின் சீரான ஒரு படலம் மற்றும் ஒரு ஒட்டும் பொருள் துணி மீது தடவப்பட்டு காயவைக்கப்படுகின்றது. பின்னர் கலைஞர் கித்தானின் மீது நுண்ணிய படங்களை வரைகிறார். அணிகலன்களை ஓவியத்திற்குள் ஒட்டும்போது மற்றும் செதுக்கும்போது சுண்ணாம்பு பசை மற்றும் இறுக்கும் பொருள் பயன்படுத்தப்படுகின்றது.

 

தொழிற்நுட்பத் திறன்கள்:-

 

 1. துணியிலிருந்து ஸ்டார்ச்சை நீக்கவும் (துணியை நீரில் 1 மணி நேரம் ஊறவைத்து காயவைக்கவும்).

2. சுமார் 60 மிலி பெவிகாலை எடுத்து, அதை ½ கோப்பை நீருடன் நன்கு கலக்கவும் (பால் தன்மையை பெறுவதற்காக).

3. துணியை இந்த பெவிகால் பசையில் முக்கி பிழியவும். இச்செயல்முறையை 5 முதல் 6 முறை திரும்பச் செய்யவும் (இதனால் துணி ஃபெவிகாலை உட்கிரகித்து, நன்கு பூசப்பட்டிருக்கும்).

4. துணியை சிறிது பிழிந்து அதை பிளைவுட் பலகையின் மீது ஒட்டவும்.

ஒட்டுவதற்கு:- முதலில் துணியை பலகையின் ஒரு பக்கத்தில் நன்கு ஒட்டி விட்டு, எதிர்பக்கத்தை நன்கு இழுத்து, துணியை நன்றாக ஒட்டவும். காற்று குமிழ்கள் மற்றும் சுருக்கங்களை நீங்கள் உள்ளங்கையை பயன்படுத்தி, துணியின் மையத்திலிருந்து ஓரம் வரை அழுத்தவும்.

5. இப்போது மூன்றாவது பக்கத்தையும் நான்காவது பக்கத்தையும் அதே முறையில் ஒட்டவும்.

6. மீதமுள்ள பெவிகால்-நீர் கலவையை இந்த பலகையின் மீது ஊற்றி சீராக பரப்பவும்.

7. இந்த பலகையை காயும் வரை சூரிய ஒளியில் வைக்கவும்.

 

 

எப்படி சென்றடைவது:-விமானம் வழியாக:-

 

மதுரை தனக்கான விமான நிலையத்தை கொண்டுள்ளது, இது நகர மையத்திலிருந்து 10 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சென்னை, பெங்களூர், திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களுக்கு தினமும் விமான்ங்கள் உள்ளன.

 

சாலை வழியாக:-

மதுரை தோராயமாக சென்னையிலிருந்து 447 கிமீ தூரத்திலும், திருச்சிராப்பள்ளியிலிருந்து 128 கிமீ தூரத்திலும், பெங்களூரிலிருந்து 435 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் உள்ள அனைத்து முதன்மையான நகரங்களுடன் மதுரையை இணைக்கும் சிறந்த சாலைகள் உள்ளன. 5 முதன்மையான பேருந்து நிலையங்களோடு, இந்நகரம் சாலை வழியே சிறந்த பயணத்தை வழங்குகிறது. பல தனியார் இயக்குநர்கள் சென்னையிலிருந்து மதுரைக்கு குளிர்பதன சக்தியுடனும், இல்லாமலும் முதல்தர மற்றும் தூங்கும் வசதியுள்ள பேருந்துகளை இயக்குக்கின்றனர். நீங்கள் கார் மூலம் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், திண்டிவனம், திருச்சி மற்றும் திண்டுக்கல் வழியாக மதுரைக்குச் செல்லும் NH45-ஐ தேர்ந்தெடுக்கவும். NH45 வழியாக உங்களை திருச்சிக்கு கொண்டு செல்லும் ஒரு மாற்று வழியும் உள்ளது. அங்கிருந்து மேலூர் வழியாக மதுரைக்குச் செல்லும் NH45B-ஐ தேர்ந்தெடுக்கவும்.

 

இரயில் வழியாக:-

 

மதுரை, ஒரு முக்கிய வழிபடுதலமாக உள்ளது, மேலும் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் இருப்பிடமாக உள்ளது. இது தனக்கென்று ஒரு இரயில் நிலையத்தை பெற்றுள்ளது. உண்மையில், இந்நகரம் தென்னிய இரயில் போக்குவரத்தின் ஒரு முக்கிய இரயில் சந்திப்பை வழங்குகிறது. இது மதுரை-திருச்சிராப்பள்ளி-திண்டுக்கல்-கொல்லம் வழியில் அமைகிறது. இது சென்னை, பெங்களூர், திருச்சி, பாலக்காடு மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்களுடன் நன்கு இணைந்துள்ளது.

 

 

 

 

 

 
தமிழ்நாடு     மதுரை     சிறு தொழிற்சாலைகள் தயாரிப்பு மேம்பாட்டு அமைப்பு